எல்லையிட்டே வாழ்கிறோம் எங்கள் மனசாட்சியாலே

கொள்ளையடிச்ச பணம் கோடி கோடியா கொல்லையில மறைந்துருக்குது.
அள்ளிக் கொண்டு போய் பெருங்கோவிலே கட்டி கொள்ளட்டும்.
எல்லையிட்டே வாழ்கிறோம் எங்கள் மனசாட்சியாலே.
ஏழைகள் எங்களுக்கோ சட்டமும் நீதியும் ரொம்பத் தூரமானதே அரசியல் தானே.

அரசாங்கத்தை தீயிட்டு கொளுத்தவே அரைநொடி ஆகாது.
எல்லையிட்டே வாழ்கிறோம் மனசாட்சியாலே.
இல்லாதவர்களுக்கு ஏது உயிரின் மதிப்பு?
பணத்திலே கொழுத்திருந்த சதைப் பிண்டத்திற்கு அங்கு முதல் மரியாதையும் கேட்குகிறதே என்ன சொல்ல?

இரவுடி இராஜ்யம் ஆண்டுவந்தான் ஒரே நாளில் எப்படி தெய்வமானான்?
வன்முறை பலவற்றின் ஆணிவேர்.
கடைசியிலே மிரட்டி உருட்டி தனக்கு சாதகமான நீதியையும் நிலைநாட்டிச் செல்கிறான்.
எல்லையிட்டே வாழ்கிறோம் எங்கள் மனசாட்சியாலே.
இல்லாதவர் அழுதால் வெளியே தெரியுமா?

கட்சியில் பதவியில் இருந்து அழுதால் நாடே திரும்பி பார்க்கிறது.
இதுவும் விளம்பரமாகி நாளை ஆட்சியைக் கட்சி கைப்பற்றுமில்ல.
கேட்டதை கொடுக்கவில்லை என்றால் நாட்டின் அமைதியைக் கெடுப்போம் என்று எவர் கூறுவார்?
அரக்கரைச் சுற்றி இருந்த அரக்கர்களே கூறுவர்.
நானும் அரக்கன் தான்.
என் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு வாழ்கிறேன் பிறரை என் சுயநலத்திற்காக பலியிடாமல்...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (9-Aug-18, 10:01 am)
பார்வை : 1981

மேலே