முகம்மது ஹாரித் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : முகம்மது ஹாரித் |
இடம் | : இலங்கை |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 05-Jun-2016 |
பார்த்தவர்கள் | : 116 |
புள்ளி | : 0 |
துவண்ட நெஞ்சில் ஆறுதல்
****துடிப்பாய்த் தேடி அலைந்திடும் !
அவல நிலையில் நசுங்கிட
****அபயக் குரலும் எழுப்பிடும் !
சிவந்த விழியில் வேதனை
****தெரிந்த இமையும் மூடிடும் !
கவலை மறக்கச் செய்திடும்
****கண்ணீர் துடைக்கும் கவிதையே !
அன்னமே தூதுசென்(று) அந்திப் பொழுதினில்
மன்னன் மனமறிந்து வா,விரைந்து!- துன்பத்தில்
வாடும் நிலைதனைச்சொல் வாய்விட்டு! என்னுடன்
கூடும்நன் னாளைக் குறி.
தப்பென்ன நீயேசொல்! தங்கமாய்த் தாங்கினேன்
அப்படியும் குற்றமென்றா லாகுமோ? - அப்பப்பா !
போதுமிவ் வாழ்வெனப் போராடி நொந்துவிட்டேன்
ஏதுநான் செய்தேன் எதிர்த்து ?
இமைமூட வில்லை இளைத்திட்டா ளென்றே
அமைதியாய்க் கூறி அமர்வாய் !- குமைந்து
குமுறுமென் நெஞ்சக் கொதிப்பைத் தணிக்க
அமுதாய் வருவா னவன் .
வாராமல் போனானேல் மாய்த்துக்கொள் வேனுயிரைத்
தீராப் பழிச்சொல்லும் சேர்ந்திடும்! - வீராப்பு
வேண்டா மெனவுரைத்து வேண்டி விரும்பியே
மீண்டுவரச் செய
ஆற்றோரப் பாதையெல்லாம் அடர்ந்தமரம் பூச்சொரியும்
காற்றோடு நாணலதும் காதலுடன் வீசிவிடும்
சேற்றோடு விராலுடனே சேல்கெண்டை போட்டியிடும்
ஊற்றெடுக்கும் நினைவுகளில் உள்ளமதும் உடன்செல்லும் !
இணைபிரியா அன்னங்கள் இன்பமுடன் நீந்திவரும்
பிணையுடனே கலைமானும் பிரியமுடன் நீர்குடிக்கும்
துணையிருக்கும் வான்நிலவும் துயிலாமல் விழித்திருக்கும்
அணைபோட்டுத் தடுத்தாலும் அடங்கிடுமோ நதியோ(யா)சை ?
ஒற்றைக்கால் கொக்குகளும் உணவுக்காய் தவமிருக்கும்
நிற்காமல் தவழ்கின்ற நீரலையில் நுரைபூக்கும்
பொற்கிரணக் கதிர்விரிய புதுவெள்ளம் புன்னகைக்கும்
சுற்றிவரும் வழியெங்கும் சுகராகம் மீட்டிடுமே !
துளி
துளியாய் இம்
மண்ணில் விழுந்த
மாணிக்கமே !
முதற் கோடி மனிதனுக்கும்
கடை கோடி மனிதனுக்கும்
கடவுள் அளித்த வரமே
மழையே !
மண்ணில் நீ வீழ்ந்து
மனிதனை பசி போரில்
வெற்றி பெற செய்பவனே
விவசாயிகளின் விருப்ப
புதல்வனே !
அன்னையாய் நீ
எங்கள் தாகம் தீர்க்க
விண்ணில் இருந்து
மண்ணில் இறங்கி வந்த
அமுதசுரபியே !
தரையில் வீழ்ந்து
தரணியில் ஓடி
திக்கெட்டு திசைகளையும்
ஆள்பவனே நீ இன்றி
அமையாது இவ்வுலகம்
ஒருபோதும் !
உணவும் ஊராது
உயிர்களும் தங்காது
உன் துணையின்றி
இம்மண்ணில் !
உரக்க சொல்வோம்
உணர்ந்து கொள்ளவோம்
மழை நீர் சேகரிப்பு
நம் ஆயுள் நீட்டிப்பு