கவிதையே

துவண்ட நெஞ்சில் ஆறுதல்
****துடிப்பாய்த் தேடி அலைந்திடும் !
அவல நிலையில் நசுங்கிட
****அபயக் குரலும் எழுப்பிடும் !
சிவந்த விழியில் வேதனை
****தெரிந்த இமையும் மூடிடும் !
கவலை மறக்கச் செய்திடும்
****கண்ணீர் துடைக்கும் கவிதையே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Nov-16, 12:04 am)
Tanglish : kavithaiye
பார்வை : 336

மேலே