காதல் கன்னி

அவள் பாத்திரம் கழுவும்போது
அதன் அழுக்கினை கீழே ஊற்றுகின்றாள்
அவள் அழகினை மேலே ஏற்றுகின்றாள்

வளையாபதி எழுதியவர்
வளையளைப் பற்றியே எழுதியிருப்பார்
இவள் கைகளைக் கண்டிருந்தால்

இவள் ஊரில் மட்டும்
மேகம் அழுது மழை பொழிவதில்லை
மேகம் அழகு மழை பொழிகின்றது

இவள் வீட்டில் மொய்க்கும்
ஈக்கள் கூட தேன் ஈயாய் மாறுகின்றது

இவள் கன்னி கருவறையில் பிறக்காது
கணினி அறையில் பிறந்தவள்
ஆண்களிடம் காதலைச்
சொல்ல மட்டும் மறந்தவள்

எழுதியவர் : குமார் (3-Nov-16, 10:17 pm)
பார்வை : 584

மேலே