மழை துளி உயிர் துளி

துளி
துளியாய் இம்
மண்ணில் விழுந்த
மாணிக்கமே !

முதற் கோடி மனிதனுக்கும்
கடை கோடி மனிதனுக்கும்
கடவுள் அளித்த வரமே
மழையே !

மண்ணில் நீ வீழ்ந்து
மனிதனை பசி போரில்
வெற்றி பெற செய்பவனே
விவசாயிகளின் விருப்ப
புதல்வனே !

அன்னையாய் நீ
எங்கள் தாகம் தீர்க்க
விண்ணில் இருந்து
மண்ணில் இறங்கி வந்த
அமுதசுரபியே !

தரையில் வீழ்ந்து
தரணியில் ஓடி
திக்கெட்டு திசைகளையும்
ஆள்பவனே நீ இன்றி
அமையாது இவ்வுலகம்
ஒருபோதும் !

உணவும் ஊராது
உயிர்களும் தங்காது
உன் துணையின்றி
இம்மண்ணில் !

உரக்க சொல்வோம்
உணர்ந்து கொள்ளவோம்
மழை நீர் சேகரிப்பு
நம் ஆயுள் நீட்டிப்பு
என்று !

மழை துளி
உயிர் துளி !

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (22-Oct-16, 11:18 am)
பார்வை : 2833

மேலே