மரணம்
மரணம்
######
நான் ஏன் பிறந்தேன்.
நான் எல்லாம் பிறக்கவில்லை என்று யார் அழுதார்.
பூமிக்கு பாரமாய் ஏன் இந்த பிறவி.
அவமானப்பட்டு
துக்கப்பட்டு
துயரப்பட்டு
தூ என்று காரித் துப்பும்
உலகில் உனக்கு இந்த
பிழைப்பு
தேவையா பிரபா.
செத்தொழிந்திட பார்த்தால்
என் சாவிலும்
வதந்திகளை பரப்பி
குளிர் காயும் இந்த உலகம்....
ஆதலாலே
நானாக சாவாமல்
தானாக சாவு வரும்
என்றே காத்திருக்கிறேன் நொடிப் பொழுதும்
மாறாக வலி தான் அதிகரிக்கிறது
அந்த வலி கூட
இன்னும் அதிகமாக வரக்கூடாதா
நான் பொட்டுனு போய்விடுவேனே..
கடவுளே
உனக்கு கண் இருந்தால்
என் உயிரை
இப்பொழுதே நிறுத்தி விடு
இல்லை
என் தற்கொலையை
இயற்கை மரணமாய்
மாற்றி எழுதி விடு....
அடுத்த பிறவி
என்று ஒன்றை தந்தால்
உன்னை கொன்று தீர்த்து விடுவேன்.
நீ உண்மையான
கடவுளாக இருந்தால்
இந்த நொடியே என்னை
ஏற்றுக் கொள்.
அடுத்த பிறவி இல்லை என்பதால்
இவ்வளவு வலிகளை
நீ தந்திருக்கக் கூடாது
நொடிப் பொழுதும் வலியில் துடிக்கிறேனே
நீ அறிவாயா...
அந்த கர்ணனின் வலி கூட
என் வலிக்கு கீழே தான்...
இறைவா
உன்னிடம் எதுவும்
கேட்கவில்லை...
என் மரணத்தை தந்துவிடு.......
மரணத்தை தந்துவிடு....
என் மரணத்தை தந்துவிடு......
~ மரணத்தை மகிழ்வோடு ஏற்கவிருக்கும் தமிழச்சி பிரபாவதி