மலரோடு விளையாடி பனியோடு உறவாடி
மலரோடு விளையாடி பனியோடு உறவாடி
மஞ்சள் வானோடு காதல் கதைபேசி
மாலை நிலவோடு கவிபாடும் தென்றலே
மனதோடு கதைபேச நீயும் வாராயோ
----இது கலிப்பா இனமான கலிவிருத்தம்
கலித்தளை மிகுந்து கலிப்பாவின் அடிப்படை கொண்டு நாலு சீரும்
நாலு அடியும் பெற்று வருவது .
மலரில் விளையாடி வெண்பனி மீதாடும்
மஞ்சள்வா னோடுமே காதல் கதைபேசும்
மாலை நிலவில் கவிபாடும் தென்றல்
மனதோடு பேசவாரா தோ
-----இன்னிசை வெண்பா
வெண்பா வடிவம் பெயருக்கு ஏற்றார் போல் கவிதை எவ்வளவு இனிமை
பெறுகிறது என்பதை ஆர்வலர்கள் கவனிக்க.
----கவின் சாரலன்