இயற்கை

இயற்கை
"""""""""""""""
இவ்வுலகை தன் நெஞ்சோடு
அரவனைத்தாய்,
எங்கள் உடலுக்கும், உயிருக்கும்
பொருள் தந்து உயர்ந்தாய்,

சிறு புழுவும் உயிர் வாழ
உணவழிபாள் அன்பாய்,
மரம் அனைத்தும் அசைந்தாட
வழிவிடுவாள் பண்பாய்,

வனமெல்லாம் செடி கொடியாய்
அவள் வாழ்வாள் செழிபாய்,
தன் உழைப்பால் வரும்
வியர்வை தனை தருவாள் மழையாய்,

அவள் படைப்பை நீ சிதைத்தால், உனை
எதிர்பாள் எரிமலையின் அனலாய்,
அப்படைப்பை நீ நேசித்தால், உனை
அனைப்பாள் பனிக்கால குளிராய்,

நாம் பிறந்தநாள் முதல் அவள்
பயணம் நம்மோடு் ஐம்பூதமாய்,
நம் பயணம் முடிந்தபின் அவள்
மடியில் அனைவரும் ஒரு ஓரமாய்,

மனோஜ்.

எழுதியவர் : மனோஜ் (23-Oct-16, 3:41 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1064

மேலே