மனோஜ் - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  மனோஜ்
இடம்:  சிங்கப்பூர்
பிறந்த தேதி :  01-Dec-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Oct-2016
பார்த்தவர்கள்:  2313
புள்ளி:  116

என்னைப் பற்றி...

தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?

என் படைப்புகள்
மனோஜ் செய்திகள்
மனோஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2019 6:44 am

வீரத்தமிழா
விழித்திடு
விதையை போலலே
முளைத்திடு
விண்ணையும் தாண்டி
ஒலித்திடு
விடியலை நோக்கி
நகர்ந்திடு

கடமைகள் உனக்கு உண்டு
காத்திரு
நம் காலம் இனி வரும்
பார்த்திரு
உன் விரலால் சரித்திரம்
படைத்திடு
நல்தொரு தலைவனை
தேர்ந்தெடு!!!

மேலும்

மனோஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2018 5:26 pm

தோழமையோடு
தோழ் கொடுத்தான்,
நான்
துவண்டெழும் பொழுது...

வல்லமையோடு
வலிமை கொடுத்தான்,
நான்
வீழ்ந்தெழும் பொழுது...

பரிவோடு
பாசம் கொடுத்தான்,
தனிமையில்
நான் தவிக்கும் பொழுது..

அன்போடு
அரவனைத்தான்,
என் மனம்
உருகும் பொழுது....

போர்வையாக எனை
அரவனைத்தான்,
குளிரில்
நான் நடுங்கிய பொழுது,

நண்பனாக
நன்னெறிகள் தந்தான்,
நான்
பாதை தவறிய பொழுது,

தந்தையாக
அறிவுரை தந்தான்,
தவறுகள்
நான் செய்த பொழுது,

அன்னையாக
ஆறுதல் தந்தான்,
கண்ணீரில்
நான் கலங்கிய பொழுது,

சண்டைகள் பல
வந்தாலும்,
அன்பின்
ஆழம் குறைவதில்லை,

பந்தங்கள் பல
இருந்தாலும்,
என்
அண்ணண் தான்

மேலும்

மிக அருமை தோழரே, நான் படித்தவுடன் என் கண்கள் ஓரம் நீர்த் துளி (தந்தையாக அறிவுரை தந்தான்,தவறுகள் நான் செய்த பொழுது) 26-May-2020 8:35 am
மனோஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Mar-2018 3:11 am

பிறப்பால் பிரிந்தோம்,
வளர்ப்பால் பிரிந்தோம்,
மொழியால் பிரிந்தோம்,
தண்ணீரால் பிரிந்தோம்,

மக்களை அரசியல் ஒடுகியது,
மக்களை சாதி பிரித்தது,
மக்களை மதம் வதைத்தது,

என் பாரதம்
சரிந்தது பிரிவினையால்,
நாம் மீட்டெடுப்போம்
நமது நல்வினையால்,

பிற(ப்)பால் வரும்
பிரிவினனை தடுப்போம்,
வளர்ப்பால் வரும்
வஞ்சனை மறப்போம்,

மொழியால் வரும்
முன்பகை மறப்போம்,
தண்ணீரால் வரும்
விரோதம் தடுப்போம்,

நமக்கான உணவை
நாமே விதைப்போம்,
மக்களின் உயிரை
உயர்வாய் மதிப்போம்

விடிகின்ற பொழுது
விதையாக விடியட்டும்,
வாழ்கின்ற வாழ்க்கை
நடுநிலையாய் வளரட்டும்,

புது பாரதம் பிறக்க
விழித்தெழுவாய்,
மக்கள

மேலும்

மனோஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jan-2018 4:20 pm

என் உரிமை எனக்கானது
என்பதில்லை இப்போது,
என் உரிமை அரசியல்
ஆனது தற்பொழுது,

உணவின் விலை விலைப்பவனிடம்
இல்லை இப்பொழுது,
உணவின் விலை அரசியல்
ஆனது தற்பொழுது,

விவசாயி நிலை தண்ணீரின்றி
கருக்கியது இப்போது,
தண்ணீரும் அரசியல்
ஆனது தற்பொழுது,

என்மொழியின் பெருமை
அழிகின்றது இப்போது,
மொழியும் அரசியல்
ஆனது தற்பொழுது,

நாம் கட்டிய வரிப்பணம்
நமக்கானது இல்லை இப்பொழுது,
வரிப்பணம் ஓட்டுக்கு
விலையானது தற்பொழுது,

மாற்றம் ஒன்றே நம்
வாழ்வின் நிலை
மாற்றும் இப்பொழுது,

தேசத்தின் நிலைமாற,
இந்த விலைமாற
ஓட்டுக்கு பணம்மாற
உன் விரலின் செயல்
மாற்றம் தான் தீர்வு,

நம் விரலின் தீர்ப்ப

மேலும்

மனோஜ் - மனோஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Nov-2016 3:51 pm

என் காதலின் வலி
***********************

தவறென்றால்
அன்றே
தவிர்த்திருப்பேன்
அவள் மேல் கொண்ட
என் காதலை,

நான் என்ன
செய்வேன்,
வழிமாறிய
என் மனம்,

அடைக்கலாமாய்
அவள் நெஞ்சம்,
இளைப்பாற இதமாய்
அவள் இதயம்,

நான் வாழ
வழியாய் அவளின்
காதல் எனை அணைக்க,

இதயம் இடம்மாற,
விழியின் இமை பரிமாற,
இருமனம் ஒன்றிணைய,

வாழக்கை வானவில்லின்
வண்ணமாய் மலர,
புது வசந்தமாய் வீசிய
மகிழ்ச்சி,

காதலில் மூழ்கி
கரைசேர
மனமின்றி ஆனந்தமாய்
நாட்கள் செல்ல,

வசந்தம் வீசிய
நாட்கள் நகர்ந்து,
புயல் வீச
தொடங்கியது
எங்கள் கரையில்,

ஊடல்கள் பெருகி,
காயங்கள் வளர்ந்து,
சினம் கொண்டன
இரு மன

மேலும்

நன்றி தோழரே தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும்..:-) 14-Nov-2016 10:56 am
பிரிவுகள் கோரமானது..மனதை வதை செய்யக் கூடியது 14-Nov-2016 8:37 am
மனோஜ் - மனோஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Nov-2016 8:24 pm

கைபேசியே எல்லையானது
**********************************

உறவுகளின் உணர்வுகள்,
தொடர்பு எல்லையைவிட்டு,
தொடர்பில்லா எல்லையானது,

கண்களின் கருத்துக்கள்,
பேசும் எல்லையைவிட்டு,
கண்பேசா எல்லையானது,

குழந்தையின் அரவணைப்பு,
ஆனந்தத்தின் எல்லையைவிட்டு,
ஏக்கத்தின் எல்லையானது,

வீட்டின் விருந்தோம்பல்,
பாரம்பரியத்தின் எல்லையைவிட்டு,
பார்க்க முடியா எல்லையானது,

நண்பர்களின் நேசமிகு நட்பு,
தோழமையின் எல்லையைவிட்டு,
தோள் தொடமுடியா எல்லையானது,

காதலின் வண்ணப்பதிவுகள்,
வரைவு எல்லையைவிட்டு,
வார்த்தையே எல்லையானது,

வாழ்க்கையின் மதிப்பும், அன்பும்,
மனிதர்களின் எல்லையைவிட்டு,
கைபேசியே எல்லை

மேலும்

நன்றி தோழரே தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் :-) 05-Nov-2016 9:17 am
அருமை..எல்லாம் யதார்த்தம் கடந்த காலம் மீட்டதை நிகழ்காலம் தொலைக்கிறது 05-Nov-2016 8:25 am
மனோஜ் - மனோஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Nov-2016 7:21 pm

என் தாயின் வலி
*********************

உயிருக்குள் உயிராய்
நீ என்னை வளர்த்தாய்,
கருவறையை எனக்கு
வரமாக தந்தாய்,

உன் இதய துடிப்பை
தாலாட்டாய் நான் ரசிக்க,
இரவெல்லாம் உறங்காமல்
எனக்காக நீ துடிக்க,

எனக்காக நீ கொடுத்தாய்
மகிழ்வோடு புதுபிறவி,
துணிவோடு நீ ஏற்றாய்
உனக்கான மறுபிறவி,

கதகதப்பாய் கருவறையில்
நித்தம் நான் இருக்க,
வெயிலிலும், மழையிலும்
வெளியே நீ தவிக்க,

நொடி பொழுதும் என்னை
நெஞ்சோடு அணைத்தாய்,
பத்து திங்கள் என்னை
பக்குவமாய் சுமந்தாய்..

உன் வலி அறிந்தும்
வெளிவர முனைந்தேன்,
வலித்தாலும் என்னை
நெகிழ்வோடு ஈன்றாய்,

என்னை பிரசவிக்க நீ
கொண்ட வேதனை,
உனை அன்றி இ

மேலும்

தங்கள் கருத்திற்கு நன்றி தோழரே :-) 04-Nov-2016 7:53 am
உண்மைதான்..தாயின் மகிமைக்கு மண்ணில் எதுவும் இணையாகாது 04-Nov-2016 7:04 am
உண்மை.. தங்கள் கருத்திற்கு நன்றிங்க :-) 03-Nov-2016 7:30 pm
அம்மா மானுடத்தின் முதல் பிரம்மா! 03-Nov-2016 7:27 pm
மனோஜ் - மனோஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2016 6:02 pm

உன்னோடு வாழ
***********************

உன்
இமை சிமிட்டும்
ஒரு நொடி
தருவாயா,
நொடி பொழுதாவது
உன்னை நான் காதலிக்க,

உன்
இதயத்தின்
ஓரமாய் வசிக்க
இடம் தருவாயா,
நான் அங்கிருந்து
உனக்காக துடிக்க,

உன்
கடைக்கண்ணால்
எனை ஒரு முறை
பார்பாயா,
உன் காந்த விழிகள்
எனை கட்டி இழுக்க,

உன்
மூச்சு காற்று
என் பக்கம் வீச
அனுமதி தருவாயா,
என் மனதில்
புது வசந்தம் பிறக்க,

உன்
உதட்டோர
குமிழ் சிரிப்பு
கொடுப்பாயா,
நான் தினம்
கொஞ்சி விளையாட,

உன்
வாய் மொழியால்
ஒரு முறை என்
பெயர் சொல்வாயா,
கல்வெட்டாய்
வரலாற்றில் பதிய,

அன்பே
உன் காதல்
எனக்காக தருவாயா,
என் உயிராய்
என்றும

மேலும்

நன்றி தோழா:-) கண்டிப்பாக நண்பா:-) 02-Nov-2016 7:13 pm
சுகமான வருடல்! தேவையான இடங்களில் வினாக்குறி,வியப்புக் குறி போன்றவற்றை இடவும் :-) 02-Nov-2016 5:22 pm
நன்றி தோழியே, தங்கள் கருத்திற்கு:-) 02-Nov-2016 11:42 am
அருமையான வார்த்தைகள்.. காதலில் அனைத்தும் அழகு... 02-Nov-2016 11:39 am
மனோஜ் - மனோஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Oct-2016 3:35 pm

என் கண்மணி
=====================

கதிரவன் உன் அழகில்
மனம் மயங்கி மறைய,
அலை எல்லாம் நீ
உறங்க தாலாட்டு பாட,
நீ உறங்கும் அழகை
வானத்து நிலா ரசிக்க,
விண்மீன்கள் எல்லாம்
சிறு கதைகள் கூற,
கண்ணுறங்கு என் கண்மணி..

....மனோஜ்...

மேலும்

மிக்க நன்றி, தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் :-) 23-Oct-2016 7:04 am
மிக்க நன்றி, தங்கள் கருத்திற்கு :-) 23-Oct-2016 7:04 am
அழகான காதல்....தொடர்ந்தும் எழுதுங்கள்....வாழ்த்துக்கள்.... 22-Oct-2016 7:12 pm
:-) 22-Oct-2016 9:23 am
மேலும்...
கருத்துகள்

மேலே