என் தாயின் வலி
என் தாயின் வலி
*********************
உயிருக்குள் உயிராய்
நீ என்னை வளர்த்தாய்,
கருவறையை எனக்கு
வரமாக தந்தாய்,
உன் இதய துடிப்பை
தாலாட்டாய் நான் ரசிக்க,
இரவெல்லாம் உறங்காமல்
எனக்காக நீ துடிக்க,
எனக்காக நீ கொடுத்தாய்
மகிழ்வோடு புதுபிறவி,
துணிவோடு நீ ஏற்றாய்
உனக்கான மறுபிறவி,
கதகதப்பாய் கருவறையில்
நித்தம் நான் இருக்க,
வெயிலிலும், மழையிலும்
வெளியே நீ தவிக்க,
நொடி பொழுதும் என்னை
நெஞ்சோடு அணைத்தாய்,
பத்து திங்கள் என்னை
பக்குவமாய் சுமந்தாய்..
உன் வலி அறிந்தும்
வெளிவர முனைந்தேன்,
வலித்தாலும் என்னை
நெகிழ்வோடு ஈன்றாய்,
என்னை பிரசவிக்க நீ
கொண்ட வேதனை,
உனை அன்றி இவ்வுலகில்
எவராலும் முடியாது
அம்மா..
மனோஜ்.