அம்மா

வேண்டுமோர் சேயென்று
தலைவனிடம் வலிவாங்கி
கருகொள்வாள்...
பூப்பெய்தலின் பூரணத்துவம் பெற்று
பரவசத்தில் பாரளப்பாள்..
ஐயிரண்டு மாதங்கள்
ஆயிரமாயிரம் கனவுகள்....
மெல்லிடை தொலைத்த
பெருவயிராள் பெருவலிகண்டு
ஒருநொடி மரணித்து மீண்டும்
சேயொடு பிறப்பாள்!!!!
வலிகள்பல பொறுத்து
தான்பெற்ற பிள்ளை
கவிழ்ந்தது முதல் ஓடியதுவரை
இதயத்தில் பதிவு செய்வாள்!!
தன்பசி மறந்து பசியாற்றுவாள்;
சான்றோன் ஆக்கிட
ஆன்றவழி செய்வாள்....
அலட்சியமே செய்யினும்
அனபோடு ஏற்பாள்!!- அத்தனை
போட்டியிலும் வேண்டுமென்றே சேயொடு தோற்பாள்!!!
அம்மா என்றால் புனிதம்
அருள்பெறுவோம்....
அம்மா என்றல் புதினம்
அன்றாடம் படிப்போம்.....