என் காதலின் வலி

என் காதலின் வலி
***********************

தவறென்றால்
அன்றே
தவிர்த்திருப்பேன்
அவள் மேல் கொண்ட
என் காதலை,

நான் என்ன
செய்வேன்,
வழிமாறிய
என் மனம்,

அடைக்கலாமாய்
அவள் நெஞ்சம்,
இளைப்பாற இதமாய்
அவள் இதயம்,

நான் வாழ
வழியாய் அவளின்
காதல் எனை அணைக்க,

இதயம் இடம்மாற,
விழியின் இமை பரிமாற,
இருமனம் ஒன்றிணைய,

வாழக்கை வானவில்லின்
வண்ணமாய் மலர,
புது வசந்தமாய் வீசிய
மகிழ்ச்சி,

காதலில் மூழ்கி
கரைசேர
மனமின்றி ஆனந்தமாய்
நாட்கள் செல்ல,

வசந்தம் வீசிய
நாட்கள் நகர்ந்து,
புயல் வீச
தொடங்கியது
எங்கள் கரையில்,

ஊடல்கள் பெருகி,
காயங்கள் வளர்ந்து,
சினம் கொண்டன
இரு மனங்கள்,

விடை தெரியா
கேள்வியாய் நின்றது
என் காதல்,

துணை தேடிய
இதயம் இன்று
தனிமைக்காக ஏங்க,

உளியாய் அவள்
பிரிவு எனை செதுக்க,
உயிர் வலியாய்
இன்று
என் காதல்..

மனோஜ்

எழுதியவர் : மனோஜ் (13-Nov-16, 3:51 pm)
Tanglish : en kathalin vali
பார்வை : 314

மேலே