தேசத்தின் தீர்ப்பு விரல் நுனியில்
என் உரிமை எனக்கானது
என்பதில்லை இப்போது,
என் உரிமை அரசியல்
ஆனது தற்பொழுது,
உணவின் விலை விலைப்பவனிடம்
இல்லை இப்பொழுது,
உணவின் விலை அரசியல்
ஆனது தற்பொழுது,
விவசாயி நிலை தண்ணீரின்றி
கருக்கியது இப்போது,
தண்ணீரும் அரசியல்
ஆனது தற்பொழுது,
என்மொழியின் பெருமை
அழிகின்றது இப்போது,
மொழியும் அரசியல்
ஆனது தற்பொழுது,
நாம் கட்டிய வரிப்பணம்
நமக்கானது இல்லை இப்பொழுது,
வரிப்பணம் ஓட்டுக்கு
விலையானது தற்பொழுது,
மாற்றம் ஒன்றே நம்
வாழ்வின் நிலை
மாற்றும் இப்பொழுது,
தேசத்தின் நிலைமாற,
இந்த விலைமாற
ஓட்டுக்கு பணம்மாற
உன் விரலின் செயல்
மாற்றம் தான் தீர்வு,
நம் விரலின் தீர்ப்பு,
நமக்கான தீர்ப்பு,
இத்தேசத்தின் மாற்றம்
நம் விரல் நுனியில்..
மனோஜ் (MDJR)
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
