உன்னோடு வாழ

உன்னோடு வாழ
***********************

உன்
இமை சிமிட்டும்
ஒரு நொடி
தருவாயா,
நொடி பொழுதாவது
உன்னை நான் காதலிக்க,

உன்
இதயத்தின்
ஓரமாய் வசிக்க
இடம் தருவாயா,
நான் அங்கிருந்து
உனக்காக துடிக்க,

உன்
கடைக்கண்ணால்
எனை ஒரு முறை
பார்பாயா,
உன் காந்த விழிகள்
எனை கட்டி இழுக்க,

உன்
மூச்சு காற்று
என் பக்கம் வீச
அனுமதி தருவாயா,
என் மனதில்
புது வசந்தம் பிறக்க,

உன்
உதட்டோர
குமிழ் சிரிப்பு
கொடுப்பாயா,
நான் தினம்
கொஞ்சி விளையாட,

உன்
வாய் மொழியால்
ஒரு முறை என்
பெயர் சொல்வாயா,
கல்வெட்டாய்
வரலாற்றில் பதிய,

அன்பே
உன் காதல்
எனக்காக தருவாயா,
என் உயிராய்
என்றும் உனை
நெஞ்சில் வைத்து
நான் உன்னோடு வாழ..

மனோஜ்..

எழுதியவர் : மனோஜ் (1-Nov-16, 6:02 pm)
Tanglish : unnodu vaazha
பார்வை : 430

மேலே