புதிய பாரதம் படைப்போம்

பிறப்பால் பிரிந்தோம்,
வளர்ப்பால் பிரிந்தோம்,
மொழியால் பிரிந்தோம்,
தண்ணீரால் பிரிந்தோம்,

மக்களை அரசியல் ஒடுகியது,
மக்களை சாதி பிரித்தது,
மக்களை மதம் வதைத்தது,

என் பாரதம்
சரிந்தது பிரிவினையால்,
நாம் மீட்டெடுப்போம்
நமது நல்வினையால்,

பிற(ப்)பால் வரும்
பிரிவினனை தடுப்போம்,
வளர்ப்பால் வரும்
வஞ்சனை மறப்போம்,

மொழியால் வரும்
முன்பகை மறப்போம்,
தண்ணீரால் வரும்
விரோதம் தடுப்போம்,

நமக்கான உணவை
நாமே விதைப்போம்,
மக்களின் உயிரை
உயர்வாய் மதிப்போம்

விடிகின்ற பொழுது
விதையாக விடியட்டும்,
வாழ்கின்ற வாழ்க்கை
நடுநிலையாய் வளரட்டும்,

புது பாரதம் பிறக்க
விழித்தெழுவாய்,
மக்களின் பிணி ஒழிக்க,
உயர்ந்தெழுவாய்,

இனியொரு பிரிவினை
உதிப்பதை தடுப்போம்,
கை கோர்ப்போம்
புதிய பாரதம் படைக்க.

எழுதியவர் : மனோஜ் (1-Mar-18, 3:11 am)
சேர்த்தது : மனோஜ்
பார்வை : 4224

மேலே