சிதைந்து போன மனிதம்
இடிந்த இடிபாடுகளோடு
இணைந்து விட்ட மனிதநேயம்
பிணங்கள் எல்லாம் ஒன்றுகூடி
உயிர்தவனுக்காக பிராத்தனை
தண்ணீரெல்லாம் வண்ணமயம்
எண்ணெய்க்கு என்று மாறியதோ ?
பிண்டம் அறுத்து இந்த
அண்டம் வேண்டாம்
ஆயுதமே ,,,,,
ஏந்தியவனிடமே சொல்
இரத்தமும் சதையும் கசக்கும் என்று
வல்லரசே உன் வன்மம் எண்ணெய் குமிழிக்கு என்றால்
கையேந்தி நில் பிச்சை இட்டு விடுகிறோம் .................