இதயம் ஒரு பூந்தாேட்டம்

எங்காே ஒர் மூலையில் என் இதயத்தில்
ஏதாே அரித்துக் காெண்டிருப்பது பாேல்
தூக்கத்தைப் பறித்து கண்ணீரை தந்தது
அலசி ஆராய்ந்து கண்டுபிடித்தேன்
தேவையற்ற கடந்த கால குப்பைகள் என்று
சுத்தம் செய்வதற்காய் வரிசையாக்கினேன்
பத்து வீதம் கூட பயனுள்ளதாய் ஏதுமில்லை
புதைப்பதா எரிப்பதா சிறு குழப்பம்
புதைத்து விட்டு புதுச்செடி ஒன்றை
வளர்ப்பது தான் முடிவாயிற்று
உரமாவதற்கு கூட தகுதியற்றவை என்று
உணர்ந்த பாேது சிரிப்பும் வந்தது
கட்டிக் காத்து காலம் பாேய் விட்டது
குப்பைகளுள் பூவை எப்படி வைப்பது
அள்ளிக் காெட்டி விட்டு
புதிதாய் ஒரு பூச்செடி வாங்கி விட்டேன்
இதயம் என்ற பூந்தாே ட்டம்
இனியாவது மலரட்டும்.