காந்தி பிறந்த தினக் கவிதை

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

*காந்தி பிறந்த*
*தினக் கவிதை*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

அக்டோபர் இரண்டில்
குஜராத் மாநிலத்தில்
போர்பந்தர் சிற்றூரில்- நீ!
கரம்சந்தக்கும் புத்லிபாய்க்கும்
"மகனாகப்" பிறக்கவில்லை
"மகானாகப்" பிறந்தாய்....

சராசரி மனிதனாக
நீ பிறந்தாலும்
உன் அன்னையின்
வளர்ப்பினால்
"சரித்திர மனிதனாக"
வளர்ந்தாய்....

ஏழையாக மட்டுமல்ல
கோழையாகவும்
இருந்தாய்......

வழக்குரைஞர் படிப்பை
முடித்து வருமானத்திற்காக
தென் ஆப்பிரிக்காவிற்கு
சிறகடித்துப் பறந்தாய்....
அங்கு
நிறவெறியர்கள்
உன்னை முதல் வகுப்பு
பெட்டியிலிருந்து
"கீழே தள்ளிய" போது தான்
உனக்குள்
"வீரம் எழுந்து" நின்றது.....

தென் ஆப்பிரிக்காவில்
கருப்பு இனமக்கள்
கையில் நீ !
எதிர்ப்பு கொடியாக
பறந்து கொண்டிருந்தாய்...

அதே நேரத்தில் தான்
உன் தாய் நாட்டில்
உனது தேசியக்கொடி
"கம்பத்திலிருந்து இறக்கப்பட்டு
மண்ணில் வீசப்பட்டிருந்தது..

இறக்கியக் கொடியை
ஏற்ற வேண்டுமானால்
உன்னால் தான் முடியும் என்று
காலம் முடிவு செய்திருந்ததால்
உன்னை இந்தியாவிற்கு
அழைத்து வந்தது....

"சாதுமிரண்டால்
காடு கொள்ளாது" என்பார்கள்
நீ மிரண்டாய்
"ஆங்கிலேயர்கள்
கொள்ளவில்லை.... !"

உன் அகிம்சை
போராட்டத்திற்கு முன்னால்
அந்தப் பீரங்கி வண்டியே
பின்வாங்கியது.....!!
ஆங்கிலயர்களின்
துப்பாக்கியிலிருந்து
வெளிவந்த தோட்டாக்கள்
உனக்கு பின்னால்
"நின்றவர்களை
கொல்ல முடிந்ததே!" தவிர
உனக்குள் நின்ற
"நம்பிக்கையைக்
கொள்ளவே முடியவில்லை.....!"

பணவலிமை
படை வலிமை
அறிவு வலிமை
ஆள்வலிமை
ஆட்சி வலிமை எல்லாம்
உன் "மனவலிமைக்கு"
முன்னால் தோற்றுப்போகவே..!வெள்ளையர்கள்
இந்தியாவை விட்டு
வெளியேறினார்கள்.....

முதுமையால்
என்ன செய்ய முடியும் என்று
கேட்டவர்களுக்கு
உன் வாழ்க்கை
ஒரு சாட்டையடி.....

வெள்ளையர்களுக்கு
நீ "எமனாக" இருந்த போதும்
அவர்கள்
உனக்கு "நண்பனாக"
இருந்தது தான்
"அகிம்சையில்"
நீ செய்த அற்புத சாதனை...!!

கடிகாரம் கூட
உன்னை கண்டு தான்
நேரத்தை
சரி செய்து கொண்டது...

கதிரவன் கூட
உன்னிடம் தான்
கடமை செய்ய
கற்றுக் கொண்டிருப்பான்....

"பூமியே !" பொறாமை பட்டிருக்கும்
உன்னிடம் இருந்த
"பொறுமையைக்" கண்டு

என் தேசம்
அரை நிர்வாணமாக
வாழும்போது
எனக்கு எதற்கு
முழு ஆடை? என்று
நீ பாதி ஆடையை
நீக்கயப் பொழுது தான்
"தேசத்தந்தை" என்று
அழைப்பதற்கான
தகுதியை நீ பெற்றாய்....!

ஹரிச்சந்திரா
நாடகத்தைப் பார்த்து
சத்தியம் தவறாமல் - வாழத் தொடங்கியப் போது தான்
உனது ஆத்மா
'"மகாத்மாவாக " மாறி இருக்கும்...

சித்த மருத்துவம்
ஹோமியோபதி
ஆயுர்வேத மருத்துவமெல்லாம்
தோற்றுத்தான் போனது
கரந்தி மருத்துவத்திற்கு
முன்னால்.....

பொய் சொல்லாமல் வாழ்ந்த
உன் வாழ்க்கை வரலாற்றை
நாளை யாரேனும்
பொய் சொல்லி
எழுதி விடுவார்கள் என்று தான்
"சத்திய சோதனை"
என்ற பெயரில்
நியே எழுதி விட்டாயா...?

எட்டி உதைத்த காலுக்கே
காலனி தைத்து கொடுக்கும்
மனிதத்தை
எப்படி தான் பெற்றாயோ?

பணக்காரர் ஆனவர் எல்லாம்
கடைசியில் பிணமானார்கள்
பிணமான நீதான்
பணமாகி விட்டாய்.....!!!

ஒருவர்
இந்துவாக வேண்டுமானால்
கீதை படிக்கலாம்
முஸ்லிமாக வேண்டுமானால்
குரான் படிக்கலாம்
கிறிஸ்தவர்களாக வேண்டுமானால்
பைபில் படிக்கலாம்
மனிதனாக வேண்டுமென்றால்
உன் வாழ்க்கை வரலாற்றைப்
படிக்கலாம்.....

நீ பிறந்த நாளை
ஒவ்வொரு ஆண்டும்
காந்தி ஜெயந்தியாக
கடைபிடிக்கிறோம்........
என்று கடைபிடிப்போமோ
உன்னால் பிறந்த
கொள்கைகளை.......?

*கவிதை ரசிகன்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

எழுதியவர் : கவிதை ரசிகன் (2-Oct-24, 8:49 pm)
பார்வை : 3

மேலே