இறைவன் படைப்பில்....

🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

*இறைவன்*
*படைப்பில்...*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

புழு இல்லை என்றால்
கெட்டுப்போனதை
அறிவது எப்படி.....?

முள் இல்லை என்றால்
வலியை
உணர்வது எப்படி....?

கல்லில்லை என்றால்
கவனத்தை
பெறுவது எப்படி....?

அழுகை இல்லை என்றால்
இழப்புக்களை
ஈடு செய்வது எப்படி?

உடைதல் இல்லை என்றால்
அடுத்த பொருள்
உருவாக்குவது எப்படி.....?

தீங்குயிரிகள்
இல்லை என்றால்
தீயவற்றை
தெரிந்து கொள்வது எப்படி.....?

கிறுக்கல்
இல்லை என்றால்
குழந்தை
கல்வி கற்பது எப்படி...?

முதுமை இல்லை என்றால்
பாவம் புண்ணியத்துக்கு
தீர்ப்பு சொல்வது எப்படி....?

மரணம்
இல்லை என்றால்
மானிடம் நிலைப்பது எப்படி...?

இறைவன் படைப்பில்
எல்லாம்
பயனுள்ளதே....!!!

*கவிதை ரசிகன்*


🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏🌏

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (3-Oct-24, 8:53 pm)
Tanglish : iraivan padaippil
பார்வை : 61

மேலே