உன்கண்களை மறைக்குதடா
உன்கண்களை மறைக்குதடா....!
31 / 10 / 2024
வாழ்வதன் மர்மங்கள் என்னான்னு தெரியல
வாழ்ந்து நானும் பார்த்துவிட்டேன் ஒண்ணுமே புரியல
வேற்றுமையும் ஒற்றுமையும் ஒன்னுன்னு நினைக்கல
வேற்றுமையில் ஒற்றுமை முழுதாயிங்கு நிலைக்கல
மறு உயிரை தனதாக நினைக்க வேண்டும் என் தோழா
மறுதலித்து ஓடிவிட்டால் மனிதநேயம் இல்லையடா
அவன் கண்ணீர் நீ துடைக்க இரு கரம் நீட்டிடா
உன் கண்ணீர்தான் துடைக்க உலகமே சேருமடா
உண்மையை மனதில் வைத்து முன்னேறு என் தோழா
பொய்மையை மூட்டைகட்டி எறிந்திடு என் தோழா
கண்களை மூடிக்கொண்டு காலை எடுத்து நீ வைக்காதே
பகுத்தறிவை முடக்கிவிட்டு ஒருமுடிவும் நீ எடுக்காதே
இருக்கும்வரை புகழுக்காக உடலை நீ சுமக்காதே
இறந்தபின் பூதவுடல் புகழுடம்பாகனும் மறவாதே
பணம்காசு நிறைந்திருந்தால் காக்கா கூட்டம் மொய்த்திருக்கும்
பையிலது குறைந்தே போனால் சிதறியே வானில்
மறைந்தேபோகும்
ஊனுடலை கொடுத்தது யார்? அம்மையப்பன் மறவாதே
உயிருள்ளவரை அவர்மனதை நோகடித்து அலையாதே
இன்றுநீ செய்வதெல்லாம் மலைபோல் சேர்ந்திருக்கும்
நாளையது உன்மகனால் அப்படியே திரும்பிவரும்
வேதமும் பைபிளும் சொல்வதெல்லாம் ஒன்றேடா
திருக்குரானில் உள்ளது அவையாவும் உண்மையடா
பேதங்கள் இல்லாமல்தான் வேதங்களும் உள்ளதடா
மேகங்களாய் மதவெறி உன்கண்களை மறைக்குதடா