பசியைத் தொடர்வது உணவு, இளமையைத் தொடர்வது முதுமை

ஐம்பது ஆண்டுகட்கு முன்பு வயது ஐம்பது
இன்றைய சராசரி வயது எழுபத்தியைந்து
வயதானோர் ஆயுள்தான் பேசப்படுகிறது
இன்றைய தினம் நினைவு கூறப்படுகிறது

குழந்தை பருவத்தைக் கண்டபின் இளமை
வாலிப விருந்து கிளுகிளுப்பூட்டும் புதுமை
பையில் கையில் கண்ணில் ஓட்டமிருக்கும்
சவால்களைச் சமாளிக்கும் துணிவிருக்கும்

இளமை என்பது ஒரு மைல்கல், அவ்வளவே
விரைவிலே ஆகிடும் நடுத்தர வயது நிஜமே
ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற தோழர்கள்
நம்முடன் கொஞ்சிட வாய்ப்பு தேடுவார்கள்

கடமை குடும்பம், இரண்டும் கூட்டு சேர்ந்து
வயதை விரைவாக ஏற்றிவிடும் உள்ளமர்ந்து
அறுபது நிறைகிறது விழாவாய்த் தெரிகிறது
இதைத் தொடர்ந்து இறங்குபடலமே ஏறுகிறது

அப்போது புரிகிறது, இறங்குவது வயதல்ல
பொருள்மேல் ஆசை வைப்பது உகந்ததல்ல
வரும் காலத்தில் தேவை உடல் ஆரோக்யம்
மனநிறைவு அமைதி இவைதான் முக்கியம்

முதுமையில் தள்ளுபடி செய்யப்படுவோமா
வயோதிகர் இல்லத்தில் தள்ளப்படுவோமா
பிள்ளைகள் எவராலும் காக்கப்படுவோமா
யாருமின்றி துன்பத்தால் தாக்கப்படுவோமா

எழுபது வயதானவர்க்கு மருத்துவக்காப்பீடு
நிச்சயம் வரவேற்கப்படவேண்டிய ஏற்பாடு
உடம்புக்கு வந்து படுத்தாமலிருக்க பாடுபடு
பிறகு உன்கையிலில்லை அவனிடம் வேண்டு

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Oct-24, 2:28 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 23

மேலே