விதவை அல்ல விதை அவள்
விதவை அல்ல விதை அவள்
***********************************
விடை தெரியா விடுகதையாய்
இவள் வாழ்க்கை,
விடை தேடி தினம்தோறும்
இவள் வேட்கை,
தன் குழந்தை தந்தை
என்று நாள்தோறும் ஏங்க,
ஏதேதோ சமாதானம்
சொல்லி அவள் தூங்க,
சுபநிகழ்ச்சி என்றாலே
சொந்தம் இவளை மறுக்க,
பெண்ணே பெண்ணை
முன்வர விடாமல் தடுக்க,
எதிரே இவள் வந்தாள்
ஒதுங்கி போகும் சில பேர்,
இவள் மனம் கலங்க
பழி பேசும் பல பேர்,
பெண்ணை தெய்வமாக
வழிபடும் நம் நாட்டில்,
விதவை என அவப்பெயர்
சூட்டி, ஒதுக்கும் இச்சமூகத்திற்கு
நான் சொல்வேன்
விதவை அல்ல அவள்
நாளைய புது சமூகத்தின்
விதை அவள் என்று...
மனோஜ்