நீல விழியிரண்டும் காதல் மொழிபேச

பாலைப் பெருவெளியில் பாயும்நீ ரோடைபோல்
சோலையிளம் தென்றல் சுகமாக வீசிட
மாலைப் பொழுதெழில் மஞ்சளோவி யம்தீட்ட
நீலவண்ணப் பூங்குழல் நீரலைபோல் நீந்திட
நீல விழியிரண்டும் காதல் மொழிபேச
நீலவான வெண்ணிலா வாழ்கவென்று வாழ்த்திட
காலம்தாழ்த் தாமல்வந் தாய்

----ஒரு விகற்ப பஃறொடை வெண்பா
ஐந்து முதல் பன்னிரண்டு அடிவரை பெற்றுவரும்
வெண்பா பஃறொடை வெண்பா.

எழுதியவர் : கவின் சாரலன் (16-Nov-24, 10:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 54

மேலே