காதல் படுத்தும் பாடு

அந்தக் காலம் தொட்டு
இந்தக் காலம் வரை
எல்லோர் மனதிலும்
காதல் பிறக்கதான் செய்கிறது..
சிலருக்கு மனம் விரும்பிய காதல்
சிலருக்கு ஒரு தலை காதல்

மனதில் பிறந்த காதலை
வெளியே சொல்ல முடியாமல்
மனசுக்குள் புதைத்து
தவித்தவர்கள் பலர்.
வெளியே சொல்லி
தோற்றவர்கள் சிலர்

குடும்ப சூழ்நிலையால்
கட்டாய கல்யாணம் செய்து
காதலை அனாதையாக
ஆக்கியவர்களும் உண்டு.

காதலில் வென்று காலமெல்லாம்
கைகோர்த்து வாழ்பவர்கள்
உலகத்தில் வெகு சிலரே
என்பதுதான் உண்மை.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (16-Nov-24, 6:34 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 223

மேலே