சவ ஊர்வலம்

சவ ஊர்வலம் ..!

இறந்து விட்ட
பிறவி ஒன்றை
ஊர்வலமாய்
தோளில் சுமந்து
சென்று கொண்டிருக்கிறார்கள்

எல்லோருமே
சேர்ந்துதான் சுமக்கிறார்கள்

முன்னே பத்து
பேர் பின்னே பத்து பேர்
என்று ஊர்வலமாய்
செல்லாமல்

சுமந்து செல்வது
உணவுக்காக என்றாலும்
உருவத்திற்கு தகுந்த
ஆட்கள் போதும்
என்று அவர்களே
முடிவு செய்து
கொள்கிறார்களோ ?

இப்பொழுது
இறந்து விட்ட
பிறவி கரப்பானாய்
இருப்பதால்

சுற்றி வர
ஏக தேச எறும்புகள்
இருபதுக்குள் இருக்கலாம்

ஒன்று கூட
சும்மா வராமல்...!







pEr


o

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Oct-24, 12:57 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : sava oorvalm
பார்வை : 13

மேலே