வானம் அழகுபடுத்திகொள்கிறாள்

வானம் அழகுபடுத்திகொள்கிறாள்

பொழுது சாய்ந்தால்
போதும்
வானம் தன்னை
அழகு படுத்தி
கொள்ள ஆரம்பித்து விடுகிறாள்
ஆனால்..!

கருமை வண்ண
தூளை முழுவதும்
பூசிய பின்
என்ன தோன்றுகிறதோ
பளிச்சிடும் பொட்டு
ஒன்றை வைத்து
சாய்மாணத்தில் வைத்து

அங்கங்கு அதை
சுற்றி சிவப்பு
நிற தூளையும்
ஒற்றி விடுகிறாள்

பார்ப்பதற்கு இலட்சணமாக
இருக்க வேண்டுமாம்.
ம்..ம்..அழகாகத்தான் இருக்கிறது

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (23-Sep-24, 8:32 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 104

மேலே