காந்திஜி, இந்த ஆள், அந்த ஆள்

இந்த ஆள்: இன்று காந்தியின் பிறந்த நாள் தெரியுமா?
அந்த ஆள்: சோனியா காந்தியா ராகுல் காந்தியா?

இந்த ஆள்: நம்ம கரன்சி நோட்டில் ஏன், மகாத்மா காந்தியின் படத்தை மட்டும் போடுகிறார்கள்?
அந்த ஆள்: அதைப் பார்த்தாவது, சிலர் பணத்தைத் திருடாமல் இருக்கலாம் அல்லவா?

இந்த ஆள்: அவ்வளவு உயர்வான தொண்டுகள் புரிந்த சர்தார் வல்லபாய் படேலை காந்திஜி ஏன் ரொம்ப தூக்கிவிடவில்லை?
அந்த ஆள்: அதுக்கு பதில்தான் மோடிஜி அவரை 177 மீட்டர் உயரம் தூக்கிட்டாரே, குஜராத்தில்.

இந்த ஆள்: உண்மை இல்லாத கணக்கை ஏன், காந்தி கணக்கு என்று கிண்டலாகக் குறிப்பிடுகிறார்கள்?
அந்த ஆள்: அது மஹாத்மா காந்தியை குறிப்பிடவில்லை. குறுக்கு வழியில் சென்ற காந்திகள், செல்லும் காந்திகள் எவ்வளவு பேரு இருந்தார்கள், இருக்கின்றார்கள்.

இந்த ஆள்: காந்திஜி சுடப்படாமல் இருந்தால், நூறுவரை முழுசா வாழ்ந்திருப்பார்.
அந்த ஆள்: நம் நாடு முழுசா இருந்திருக்குமா, தெரியாது.

இந்த ஆள்: சுதந்திரம் வாங்குவதற்கு முக்கிய காரணமான காந்திஜியை, சுதந்திரம் வாங்கி, ஆறு மாதங்கள் கூட சுதந்திரமாய் வாழவிடலையே?
அந்த ஆள்: சுதந்திரம் கிடைத்தவுடன், யாரை வேண்டுமானாலும் சுடலாம் என்ற சுதந்திரம் கிடைத்துவிட்டதாக, துரதிருஷ்டவசமாக, அப்போது சிலர் நினைத்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (2-Oct-24, 2:57 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 24

சிறந்த நகைச்சுவைகள்

மேலே