உங்களை மிரட்டிட்டுப் போக வந்தேன்
காவல் ஆய்வாளர்:
என்னடா சங்கிலி இந்தப் பக்கம்?
@@@@@
உங்களை எச்சரிச்சு மிரட்டிட்டுப் போகத்
தான் வந்தேன்.
@@@@@@
என்னடா முட்டிக்கு முட்டி லத்தில விளாசி
விடணுமா?
@@@@@@
முதலில் என்னை வாடா சொல்றதை
நிறுத்துங்க ஆய்வாளரே! நான் இப்ப ஒரு
பெரிய கட்சியின் அவதூறு பரப்புக் குழுவின்
மாநிலத் தலைவர். உங்களைப் பத்தி
ஒண்ணு போட்டா உடனே எங்க தூக்கி
அடிப்பாங்கன்னே தெரியாது.
@@@@@@
ஓ... அப்படியா?
@@@@@@
இன்னும் பத்து நிமிசம் நான் இங்க
இருந்தா எங்கள் வழக்குரைஞர்
குழுவிலிருந்து பத்து பதினைந்து பேர்
இங்க வருவாங்க. என்னைக் கண்கானிச்சு
பாதுகாக்க மூணு குழுக்கள். நான் எங்கள்
கட்சியின் அவதூறு பரப்புக் குழுவின்
மாநிலத் தலைவர். இப்போது என் பெயர்
புரட்சிப் புலவர் சங்கிலிதாசர்.
@@@@@@@@
ஓ... புரட்சிப் புலவரா?
@@@@@@
ஆமாம் கவிதை எழுதியே அவதூறு
பரப்புவேன்.
@@@@@@
சரி. சரி. அவதூறு பரப்பும் குழுவின்
மாநிலத் தலைவர் புரட்சிப் புலவர்
சங்கிலியாரே போயிட்டு வாங்க ஐயா.