மனம் திறந்த மடை திறப்பு

விடாத மழை
விடிய விடிய மழை
வீட்டை விட்டே வெளியேறச்
சொல்லும் மழை!

'ஏரியா'க்களாக மாறியிருந்த ஏரிகள்
மீண்டும் ஏரிகளாகவே
மாறிய அதிசயம்!

'பார்'களில் மட்டும்தான் சமத்துவம்
என்று இனி யார் சொல்வார்கள்
உயிரைக் காக்க
உதவிடுபவர்களை பார்த்தபின்பு!

மழைநீர் ஏரி நிரப்பி
மடைதிறந்த வெள்ளம்
மக்களின் மனங்களைத் திறந்தது!

ஒருபுறம் முழ்கும் கைகள்
மறுபுறம் அதைக் காக்கும் கரங்கள்!

பிரிவினையைத் தூக்கி எறிந்துவிட்டு
கைகோர்த்து தூக்கி நிறுத்திவிட்டு
உள்ளதை முழு உள்ளத்தோடு பகிர்ந்துவிட்டு
தொடர்ந்து அறப்பணி நடக்கிறது தூக்கம்கெட்டு

சென்னையில் மழைவெள்ளம் வடிந்தது -- ஆயினும்
அன்பு வெள்ளம் உடைப்பெடுத்தது
இம்முறை எவ்வித பாதிப்பில்லை!

எழுதியவர் : அலெக்சாண்டர் (14-Dec-15, 12:11 am)
பார்வை : 147

மேலே