யார் நீ
யார் நீ?
உனக்கும் எனக்கும் என்ன உறவு?
என்னை நீ நேசிக்கிறாயா?- என்னை
உன்னிடம் பேசவிடாமல் தடுப்பது எது?
தேவையற்ற சிந்தனைகள்!
பதிலற்ற கேள்விகள்!
மனம் விட்டில் பூச்சியாய்
உன் நினைவுகளில் சிறகடிக்க
வேதனையும் வெறுமையும் மட்டுமே
எஞ்சியுள்ளது என் மனதில்!