அப்பா

அதிகம் எழுதப்படாத கவிதை அப்பா...
அதிகம் வாசிக்கப்படும் கவிதை அப்பா...

தன்னலம் கருதாத தாய்மையும்
தலைவணங்கும் உன்னதம் அப்பா...

சுயநலம் தவிர்த்து சுமை சுகமென
சுமக்கும் சுகந்தம் அப்பா...

உலகின் விடியல் ஆதவனில்...
உயிரின் விடியல் அப்பாவில்...

அன்னை கருவில் பத்து மாதம்...
அன்பால் அவரில் அனுதினமும்...

ஆயுள் உள்ளவரை மறக்காதே மனம்...
அவர் கரம் பிடித்து நடை பழகிய தினம்...

மண் சேரும் மழையின் வாசம் சிறிது...
உன் நேசம் சொல்லும் பாசம் பெரிது...

சிறு சினுங்களுக்கும் பெரும் துயர் கொள்வார்...
சிறு புன்னகையில் பெரும் படை வெல்வார்...

தோற்று மகிழ்வார் குழந்தையாய் இருக்கையில்...
தோள் கொடுப்பார் தோழனாய் இளமையில்...

உலகையே கண் முன்னே நிறுத்துவார்...
உலகமே அவர் ஒருவராய் தெரிவார்...

கலைகள் எல்லாம் வியக்கும் வண்ணம்
கருத்தில் மிளிரும் உயிரோவியம் அப்பா...

உலக வரலாற்றில் பதியப்படாத
உன்னத காவியம் அப்பா...

கதையின் நாயகன் மட்டுமல்ல...
கதைகளுக்கே நாயகன் அப்பா...

அகிலமே உறவாயினும் அவரின்றி
அணுவும் அசையாது நம்மில்...

ஒரு தினம் போதுமா அப்பாவுக்கு !
ஒவ்வொரு தினமும் அவர் தினமே !

எழுதியவர் : லக்ஷ்மி (16-Jun-19, 10:49 pm)
சேர்த்தது : லக்ஷ்மி
Tanglish : appa
பார்வை : 4123

மேலே