20 காதல் கவிதைகள்

சூரியனையே சுட்டெரிக்கும்
பார்வை உனது !
சுகந்தமே ஒரு முறையாவது
என்னை பார்த்துவிடு !

நீ சொல்லாத வார்த்தைகள் கூட
என் காதுகளுக்கு சுகமே !
இதயமே இருந்தாலும் ஒரு வார்த்தையாவது
என்னிடம் சொல்லிவிடு !

உன் சுவாசக்காற்றாய் சுவாசிப்பதற்காகவே
நான் உயிர் வாழ்கிறேன் !
என்னுயிரே உனக்கு தெரியுமா தென்றலைவிட
வாசமானது உன் சுவாசம் என்று !

திருக்குறளாய் வீற்றிருக்கும் உன்
இதழ்களின் அர்த்தங்கள் எனக்கானவை !
திருமகளே திருவள்ளுவர் என எந்தன் பெயர்
மாற்றி அமைத்துவிட்டேன் !

கைதாக்கினாய் எனது கைகளை
உனக்கான கவிதைகளுக்காக !
இனியவளே இலக்கணப்பிழை தவிர்த்து
இதயத்தை இடம் மாற்று !

எழுதியவர் : ஸ்ரீ லக்ஷ்மி (29-Oct-15, 5:08 pm)
சேர்த்தது : லக்ஷ்மி
பார்வை : 129

மேலே