நினைவுகளால் ஒரு போர்வை
இரவுகளின் தனிமைகளில்
உன் நினைவே போர்வை !
இனிமைகளை துளித்துளியாய்
வழங்கிடும் உன் பார்வை !
மனம்முழுதும் உனதுருவம்
வரைகிறதே கோலம் !
உறவுகளை வளர்ப்பதற்கு
உதவிடுமே காலம் !
கனவுகளில் பனிமலராய்
ஒளிவிடும் உன் தேகம் !
இதழ்களில்தேன் அருந்துவதால்
தீர்ந்திடுமோ தாகம் !
விலகுவதால் நெருங்கிவர
விரும்புகிறாய் போலும் !
வெறுப்பதுபோல் பாவனையால்
நடிப்பதெல்லாம் போதும் !
@இளவெண்மணியன்