அனிதா

தயவு செய்து முழுமையாக படிக்கவும்

மரணிப்பதற்கு முன்னாள் சகோதரி அனிதா நினைத்தது இப்படி தான் இருந்திருக்கும் என்பது எனது கற்பனை:
அடிப்படை வாழ்க்கை வாழ்பவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல கூடாது என்பதற்கு தான் இந்த நீட் தேர்வா,
அடித்தட்டு மாணவ சமூகத்தினரின் கனவினை அழிப்பதற்கு தான் இந்த நீட் தேர்வா,
ஆடம்ப வாழ்க்கை வாழ்பவர்களின் கனவு நனவாக உதவும் இந்த அரசு
அன்றாட வாழ்க்கை வாழும் என்னை போன்ற கிராமத்து மாணவர்களின் கனவுகளுக்காக
கல்வி அளிக்க மறுப்பதற்காக தான் இந்த நீட் தேர்வா .
மக்களின் உயிரை காப்பற்ற உதவ வேண்டியே அரசே
மக்களின் உயிரை எடுக்கும் நோக்கில் இருக்க
மாணவி நான் மட்டும் என்ன விதி விலக்கா.

என் மரணம் தான் என்னை போன்ற மாணவர்களின் கனவுகளுக்கு விடுதலை என நினைத்தால்
நான் மரித்து போகிறேன் இம்மண்ணில்.

சீராட்டி வளர்த்த பிள்ளை
பாராட்டி வளர்ந்த பிள்ளை
என் பார்வை முன்பே பாடையில் போகிறாள் என நினைப்பார் என் தந்தை.

கனவொன்று நனவாக
காலம் காலமாய் காத்திருந்தேன்,
கல்வியில் வந்த கன்னாபின்னமான
சட்டத்தால்
சின்னாபின்னமாகியது என் கனவு.

அறிவற்ற அரசியல்வாதிகளால்
அழிந்தது என் கனவு.
அழிந்தது என் கனவு மட்டுமா?
இல்லை நானும் சேர்ந்து தான்.

எழுதியவர் : அருண்குமார் ,செ (7-Sep-17, 8:31 pm)
சேர்த்தது : அருண்குமார்
பார்வை : 101

மேலே