கவிதை சொல்லவா

கவலை கொண்ட மனம் இங்கு
கன்னி அவள் முகம் காண
வழியின்றி !
உறக்கத்தை தொலைத்து
நினைவுகளை நாடுது !

மயக்கும் பேச்சுக்காரி
மாயவலை வீசிவிட்டாள்
மனமெல்லாம் அவளையே தேடுது !

ஈட்டி விழி பார்வைக்காரி
இடி தாக்கும் பார்வைபோல்
வீசித்தான் போகிறாள்
இடர் கொண்டு இதயம்தான் நோகுது !

பெருத்த தனங்களுக்கு சொந்தக்காரி
என்று பெருமைப்பட பேசினால்
எரித்து விடும் பார்வை வீசுகிறாள் !
இதனால் என்னவோ அடிக்கடி பார்க்க தோணுது !

காதல் கொண்ட கன்னி மனமே
கவிதை சொல்லவா ! கட்டி அணைக்கவா !
தேன் இதழ் முத்தம் தந்து தித்திப்பை அறிந்து கொள்ளவா !
என் எண்ணத்தை நீ புரிந்து கொள்ள வா !
புது படைப்பை ஒன்றை உருவாக்கி நமதாக்கி கொள்வோமா !

நாளும் பொழுதும் நமதாக்கி கொள்வோமா !
பகலை பார்க்காமலே பத்திரமாய் இருந்துதான்
கொள்வோமா !

இரவுதான் இனிமை எனக்கு
இந்த பெண்மைதான் இறுதிவரை துணை எனக்கு !
நான் வேண்டும் உனக்கு
நீ வேண்டும் எனக்கு

இதுதானே என் மனக்கணக்கு !

எழுதியவர் : முபா (7-Sep-17, 7:51 pm)
Tanglish : kavithai sollavaa
பார்வை : 434

மேலே