லஞ்சம் இல்லா சமூகம்

தலைவிரித்தாடும் லஞ்சம்
புகாரை அடுக்கி வைக்க
இமயத்தின் அளவை மிஞ்சும்

கருவிலிருந்து காடு வரை
இறைவனுக்கு அடுத்து என
எங்கும் நிறைந்து எதிலும் நிறைந்து
நேர்மை குறைந்து கொஞ்சம் தொலைந்து

யார் பொறுப்பு லஞ்ச ஒழிப்பு
யாரை கேட்பினும் யாரும் பொறுப்பல்ல
தனி ஒரு ஒழுக்கம் தானாய் பிறக்கும்
நாளை தலைமுறை அதனை துவங்கும்

தட்டி கேட்கும் தனிதுறை வேண்டும்
அதனை அடக்கும் ஒரு தலை வேண்டும்
எதற்கும் அஞ்சா முடிவுகள் வேண்டும்
அதற்கு அரசே வழி வகுக்க வேண்டும்

சொல்லிவிட்டேன் நான் அறிந்தவரை
தூது விட்டேன் என் கவிதையினை
காத்திருப்பேன் முடிவு வரை...
லஞ்சமில்லா சமூகம் கானும்வரை...

எழுதியவர் : ருத்ரன் (14-May-24, 10:22 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 23

மேலே