காதல் பஞ்சம்

முகம் பார்க்காமலே மோகம்
முகநூலில் தணியாத தாகம்
முகமூடியில் தேடுவதோ தேகம்
முடிவுரையில் அரங்கேறும் சோகம்

இருகப்பற்றி இணைந்தே நெடுந்தூரம்
இருசக்கரவாகனத்தில் இளம் நெஞ்சங்கள்
இரவிலும் இமைகள் மூடுவதில்லை
இருதயங்கள் இணையத்திலே இணைந்திருக்க !

கன்னியவள் கடைக்கண் காட்சிபெற
கவிதைகள் போதுமது கடந்தகாலம்
காலம் கனிந்ததா ? கசந்தாதா ?
காதல் பஞ்சம் ! காலச்சுழற்சியில் …

- குட்டி

எழுதியவர் : Jayaram (14-May-24, 10:35 pm)
சேர்த்தது : jairam811
Tanglish : kaadhal pancham
பார்வை : 60

மேலே