jairam811 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : jairam811 |
இடம் | : மூணார் |
பிறந்த தேதி | : 08-Nov-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Feb-2011 |
பார்த்தவர்கள் | : 341 |
புள்ளி | : 33 |
ஒரு இயற்கை விரும்பி
தடைகளை உடைக்கப் பிறந்தவன்
அடிமைதனத்தை அகற்ற வந்தவன்
சுதந்திரத்தை சுவாசிக்கச் செய்பவன்
புரட்சியில் பிறந்தவன் நான் !...
அதிகாரத்திற்கு அஞ்சுவதில்லை நான்
ஆதரவற்றவரின் ஆயுதம்தான் நான்
உங்களில் ஒருவன்தான் நான்
ஊரெங்கும் பேசப்படுபவன்தான் நான்
ஏழை பணக்காரன் எனக்கில்லை
என்னில் சாதிமத பேதமில்லை
ஏற்றத்தாழ்வோ எள்ளளவும் என்னிலில்லை
ஏமாற்றுபவரோ என்னையும் விட்டுவைக்கவில்லை..
அறமற்று அட்டூழியங்கள் பலசெய்து
அரசியலில் எல்லாம் சகஜமென்பர்
ஆபாச லீலைகள் ஆயிரம்செய்து
அரசியல் ஓர் சாக்கடையென்பர்
அடக்குமுறை அராஜகம் ஆட்டிப்படைக்க
அளவிலா பொய்கள் அன்றாடமாகிவிட
துரோகம் துஷ்புரயோக
முகம் பார்க்காமலே மோகம்
முகநூலில் தணியாத தாகம்
முகமூடியில் தேடுவதோ தேகம்
முடிவுரையில் அரங்கேறும் சோகம்
இருகப்பற்றி இணைந்தே நெடுந்தூரம்
இருசக்கரவாகனத்தில் இளம் நெஞ்சங்கள்
இரவிலும் இமைகள் மூடுவதில்லை
இருதயங்கள் இணையத்திலே இணைந்திருக்க !
கன்னியவள் கடைக்கண் காட்சிபெற
கவிதைகள் போதுமது கடந்தகாலம்
காலம் கனிந்ததா ? கசந்தாதா ?
காதல் பஞ்சம் ! காலச்சுழற்சியில் …
- குட்டி
கண்களில் காதல்
கன்னத்தில் முத்தம்
கட்டிலில் சுகமென
கட்டியவள் காதலுடன்
காலமெல்லாம் கரம்பிடித்திருக்க
வாலிபம் கடந்துவிட்டும்
வயாகரா துணையின்றி
நயாகரா நீர்வீழிச்சிபோல்
காமம் பெருக்கெடுத்து
கணநொடி இடைவெளியிலும்
கனவில் கலவி உறவாடிட
காகிதங்கள் இரையாகின்றன
காமத்தீயில் கவிதை படைத்திட !!!
- குட்டி
உணர்ச்சிகளுக்கு விலங்குபோட்டு
உள்ளத்தைச் சிறைப்படுத்தி
காதலோ காமமோ
கைதியாய்க் கழியச்செய்து
வாலிபம் வயதாகிவிட்டது
அடக்கமென்ற ஆயுள்தண்டனையால் !!!
இதயம் வலிக்குது நித்தம்
இதுவோ இறைவனின் சித்தம்
அனுதினம் எண்ணுகிறது நெஞ்சம்
அழுதழுதோ கண்ணீர் பஞ்சம்
ஆனைமலை சிகரமாம் ஆனைமுடி
அழகுப் பெட்டகமாம் பெட்டிமுடி
அடைமழையில் அதிர்ந்ததே ஓர்நொடி
அப்பாவிகளாய் மடிந்தனரே மண்மூடி
கொள்ளைநோய் கொடுத்ததோர் விடுமுறை
மாணவ மணிகளோ மனைகளில்
சரித்திரம் படைக்கும் சந்ததிகள்
சரிந்த சடலங்களாய் சவப்பெட்டிகளில்
கானக அழிவின் விளைவோ
கர்வ கர்ம வினையோ
காப்பாத்த யாருமில்ல பக்கத்தில
கண்ணீரோடு கலங்குகிறோம் இன்றுவர
கொத்துக் கொத்தாய் மரணம்
கொடியவர்க்கும் வேண்டா இத்தருணம்
பேரன்பு அருள்வாயோ இறைவா
பேரிடரிலா பெருவாழ்வு தந்து.
இதயம் வலிக்குது நித்தம்
இதுவோ இறைவனின் சித்தம்
அனுதினம் எண்ணுகிறது நெஞ்சம்
அழுதழுதோ கண்ணீர் பஞ்சம்
ஆனைமலை சிகரமாம் ஆனைமுடி
அழகுப் பெட்டகமாம் பெட்டிமுடி
அடைமழையில் அதிர்ந்ததே ஓர்நொடி
அப்பாவிகளாய் மடிந்தனரே மண்மூடி
கொள்ளைநோய் கொடுத்ததோர் விடுமுறை
மாணவ மணிகளோ மனைகளில்
சரித்திரம் படைக்கும் சந்ததிகள்
சரிந்த சடலங்களாய் சவப்பெட்டிகளில்
கானக அழிவின் விளைவோ
கர்வ கர்ம வினையோ
காப்பாத்த யாருமில்ல பக்கத்தில
கண்ணீரோடு கலங்குகிறோம் இன்றுவர
கொத்துக் கொத்தாய் மரணம்
கொடியவர்க்கும் வேண்டா இத்தருணம்
பேரன்பு அருள்வாயோ இறைவா
பேரிடரிலா பெருவாழ்வு தந்து.
நிதம் வருமோ யுத்தமிலா நித்தம்
இதம் தருமோ சத்தமிலா முத்தம் !
சுகம் தருமோ மங்கையின் சுவாசம்
ஆசுகம் வீசுமோ மலரின் வாசம் !
மேகம் வருடமோ மெல்ல விண்ணை
தேகம் தேடுமோ வெல்ல பெண்ணை !
வேகம் கூடுமோ உச்சத்தில் கெஞ்சி
தாகம் தனியுமோ மிச்சத்தில் எஞ்சி
நிதம் வருமோ யுத்தமிலா நித்தம்
இதம் தருமோ சத்தமிலா முத்தம்!
தமிழா! தமிழா! தள்ளாடும் தமிழா!
தாய் மறந்து தாரம் மறந்து
தனை மறந்த தமிழா!
மனை மறந்தும் மது நுகர்ந்தும்
மதி இழந்தும் மரணம் உணர்ந்தும்
மயங்கி மடியும் மனிதா!
மனிதம் மறந்து மதங்கள் பூசி
சமூகம் துறந்து சாதிகள் பேசி
பாதை மறந்த போதையே!
விழிமின் தமிழா! வீதியில் விழுமுன்!
மதுவிலக்கு கொண்டுவா மனிதா! மனதில்!!!
சாகும்முன் பிணமாகாதே! சாதித்திடு
என்னவளே!..
எல்லாம் இருந்தும்
எதற்கும் இயலாதவனாய் நான்,
எனை நீ
ஏற்காமலே சென்றதினால்...
அன்பே அன்று,
கண்களால் பேசினாய் நீ..
கவிதையாய் கசிந்தாய் நீ..
உயிராய் உருகினாய் நீ..
உள்ளத்தால் பருகினாய் நீ..
இன்றோ,
குடும்பத்திற்காக குருடனாக்கினாய் எனை
ஊருக்காக ஊமையாக்கினாய் எனை
இறுதியில்,
பிறருக்காக நடை
பிணமாக்கினாயேப் பெண்ணே
நாம் கொண்ட காதலை
கொன்றுவிட்டு ???...
குட்டி