அரசியல்

தடைகளை உடைக்கப் பிறந்தவன்
அடிமைதனத்தை அகற்ற வந்தவன்
சுதந்திரத்தை சுவாசிக்கச் செய்பவன்
புரட்சியில் பிறந்தவன் நான் !...

அதிகாரத்திற்கு அஞ்சுவதில்லை நான்
ஆதரவற்றவரின் ஆயுதம்தான் நான்
உங்களில் ஒருவன்தான் நான்
ஊரெங்கும் பேசப்படுபவன்தான் நான்

ஏழை பணக்காரன் எனக்கில்லை
என்னில் சாதிமத பேதமில்லை
ஏற்றத்தாழ்வோ எள்ளளவும் என்னிலில்லை
ஏமாற்றுபவரோ என்னையும் விட்டுவைக்கவில்லை..

அறமற்று அட்டூழியங்கள் பலசெய்து
அரசியலில் எல்லாம் சகஜமென்பர்
ஆபாச லீலைகள் ஆயிரம்செய்து
அரசியல் ஓர் சாக்கடையென்பர்

அடக்குமுறை அராஜகம் ஆட்டிப்படைக்க
அளவிலா பொய்கள் அன்றாடமாகிவிட
துரோகம் துஷ்புரயோகம் தொடர்ச்சியாகிட
துடிதுடிக்கிறேன் எல்லாம் என்பேரில் !...

பேரன்பு மிக்க பெரியோரே
அருமை என் தாய்மாரே
நான் அரசியல் பேசுகிறேன்
ஆம் ! என்பெயர் அரசியல் !...

- குட்டி

எழுதியவர் : (15-May-24, 8:45 pm)
சேர்த்தது : jairam811
Tanglish : arasiyal
பார்வை : 18

மேலே