இதயம் வலிக்குது நித்தம்

இதயம் வலிக்குது நித்தம்
இதுவோ இறைவனின் சித்தம்
அனுதினம் எண்ணுகிறது நெஞ்சம்
அழுதழுதோ கண்ணீர் பஞ்சம்

ஆனைமலை சிகரமாம் ஆனைமுடி
அழகுப் பெட்டகமாம் பெட்டிமுடி
அடைமழையில் அதிர்ந்ததே ஓர்நொடி
அப்பாவிகளாய் மடிந்தனரே மண்மூடி

கொள்ளைநோய் கொடுத்ததோர் விடுமுறை
மாணவ மணிகளோ மனைகளில்
சரித்திரம் படைக்கும் சந்ததிகள்
சரிந்த சடலங்களாய் சவப்பெட்டிகளில்

கானக அழிவின் விளைவோ
கர்வ கர்ம வினையோ
காப்பாத்த யாருமில்ல பக்கத்தில
கண்ணீரோடு கலங்குகிறோம் இன்றுவர

கொத்துக் கொத்தாய் மரணம்
கொடியவர்க்கும் வேண்டா இத்தருணம்
பேரன்பு அருள்வாயோ இறைவா
பேரிடரிலா பெருவாழ்வு தந்து.

எழுதியவர் : ரா.ஜெயராமன் (8-Aug-21, 7:03 pm)
சேர்த்தது : jairam811
பார்வை : 232

மேலே