பொல்லாத பிங்க் ரோஜா

ரோஜா உன் நிறம் பிங்க்
ரோஜா உன் இதழ்கள் மென்மை
நீ இருக்கும் சிரிக்கும் தோட்டமே தோட்டம்
ரோஜா உன்னிடம் ஒரு கேள்வி
உன்னை இவள் சூடினால் அழகா ?
உன்னை கவிஞன் நான் பாடினால் அழகா ?
என்னை இவள் சூடும்போது
நீ பாடினால் அது உன் கவிதைக்கு அழகு
மாறாக
என்னையும் இவளையும் நீ தனித்தனியே பாடினால்
அது உன் ரசனைக் குறைவு என்றது
அந்த பொல்லாத பிங்க் ரோஜா !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Aug-21, 6:24 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : pollatha pink roja
பார்வை : 269

மேலே