இதயம் அழுகிறதே தமிழா
இதயம் அழுகிறதே தமிழா
இதயம் அழுகிறதே !
இருப்பதும் பறி போகுதே
உரிமைகள் பறி போகுதே
இன உணர்வு குறைகிறதே
உள்ளதும் குறைகிறதே
தமிழை அழிக்க முனைகிறதே
அடித்தளமிட முனைகிறதே !
இதயம் அழுகிறதே தமிழா
இதயம் அழுகிறதே !
நீலிக் கண்ணீர் வடிக்கிறதே
பச்சோந்திகள் வடிக்கிறதே
சுயநல மனங்கள் நடிக்கிறதே
தேசமெங்கும் நடிக்கிறதே
அரிதாரம் பூசி முந்துகிறதே
அதிகாரம் முந்துகிறதே !
இதயம் அழுகிறதே தமிழா
இதயம் அழுகிறதே !
கபட நாடகம் அரங்கேறுதே
நாளொன்று அரங்கேறுதே
வெற்றி பெற நினைக்கிறதே
வேட்டையாட நினைக்கிறதே
பிரித்தாள நமை துடிக்கிறதே
துண்டாட துடிக்கிறதே !
இதயம் அழுகிறதே தமிழா
இதயம் அழுகிறதே !
விழித்தெழ இனி தயங்காதே
பொய்யுரைக்கு மயங்காதே
நம்மொழி அழிக்க உதவாதே
செம்மொழியை மறக்காதே
தமிழ்ப்பற்றில் சற்றும் தளராதே
தமிழினம் காத்திட தவறாதே !
இதயம் அழுகிறதே தமிழா
இதயம் அழுகிறதே !
பழனி குமார்
**********************************************************************************************************************************************
{இதை நான் கவிதையாக எழுதாமல் பாடல் வடிவில் எழுத முயற்சித்தேன் . 'பழனி' எனும் திரைப்படத்தில் ,