காதல் மாங்கல்யம்
இரவாக நான் வருவேன்
வெள்ளி நிலவாக நீ இருக்க
பூக்களாக நான் வருவேன்
உன் கூந்தலிலே நான் வாழ
உன் கண் இமையாக நான்
இருப்பேன்
உன் கனவுகளை நான் சுமக்க
உன் நினைவாக நான் வருவேன்
என் இதய துடிப்பாக நீ இருக்க
மணப்பெண்ணாக நீ இருக்க
மாங்கல்யாமாக நான் வாழ்கிறேன்