மதுவிலக்கு

தமிழா! தமிழா! தள்ளாடும் தமிழா!
தாய் மறந்து தாரம் மறந்து
தனை மறந்த தமிழா!

மனை மறந்தும் மது நுகர்ந்தும்
மதி இழந்தும் மரணம் உணர்ந்தும்
மயங்கி மடியும் மனிதா!

மனிதம் மறந்து மதங்கள் பூசி
சமூகம் துறந்து சாதிகள் பேசி
பாதை மறந்த போதையே!

விழிமின் தமிழா! வீதியில் விழுமுன்!
மதுவிலக்கு கொண்டுவா மனிதா! மனதில்!!!
சாகும்முன் பிணமாகாதே! சாதித்திடு

எழுதியவர் : jairam (12-Aug-15, 10:01 pm)
பார்வை : 83

மேலே