உன்னோடு நான் என்னோடு நீ
ஒரு சுருக்கில் இருவரும்..
ஒரு குழியில் இருவரும்..
ஒரு அம்பில் இருவரும்..
ஒரு தீயில் இருவரும்..
ஒரு நஞ்சில் இருவரும்..
ஒரு அலையில் இருவரும்..
ஒரு நெஞ்சடைப்பில் இருவரும்..
ஒரு நெரிசலில் இருவரும்..
ஒரு விபத்தில் இருவரும்..
ஒரு வலியில் இருவரும்..
ஒரு கொலையில்
நான் மட்டுமே.
உனக்கு முன்
நின்று கத்தியை
தாங்கி –உன்
மடியில் வீழ்ந்து கிடக்கின்றேன்..