தனித்துகிடக்கிறேன்
என்னடா இந்த காதல்.......!
அன்று...!
கைபிடித்து கலங்காதே! என்று
கனவில் வந்தவள்..
காலங்கள் என்னொடும்,
மண்ணொடு என்றவள்..!
மல்லிகை இதழ் கொடுத்து
மனதில் கவி எடுக்க வைத்தவள்..!
இன்று....!
யோசிக்க நேரமில்லாத காலம்,
எங்குதேட?
என் காதலையும் தேடலையும்,
திரும்பி படுக்க இடம்மில்லாத..!
தெருவோர வாழ்க்கை..! என்னை,
சீரழித்து பல நாளாகி பல்லிழிக்கிறது..!
பார்த்துகொண்டிருக்கும் கடவுளே,
என்னை பார்த்து பரதனாட்டியம்
ஆடி மகிழ்ச்சி கொண்டாட..!
நான்..! இனி பகல் இரவாய்..!
கனவுகண்டு என்ன பயன்..?
புரண்டழுத என்
கரிசல்மண் பாதையும்,
ஊர் உறங்கும் நேரமும்,
ஊலையிடும் நரியும்....
குரட்டை விடும் என் தெருவுக்குள்..!
நானோ, தனித்துகிடக்கிறேன்..!
ஏனோ..! என் நம்பிக்கை
மட்டும் என்னை விட்டு
எங்கும் நகரமல்....!
மதுரை கருப்புவாசகம்..!
அரபு நாட்டில் இருந்து.....!
செல்.. +9715 556479003