vasagam jasmine - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : vasagam jasmine |
இடம் | : Madurai, Melur, Vellalur Kovilpatti |
பிறந்த தேதி | : 02-Apr-1985 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 29-May-2012 |
பார்த்தவர்கள் | : 279 |
புள்ளி | : 62 |
இவன் மதுரை மாவட்டம்
மேலூர் தாலூகாவில் உள்ள,
வெள்ளலூர் நாட்டுக்குள்,
ஏழைகாத்தம்மன் கோவில்பட்டியில்,
ஏழைக்குள் அவதரித்தவன்...
அம்மாவின் ஆசைக்கிணங்க,
ஏழைத்தாய்யின் பாசம் தாக்க..!
இன்று சாலைக்குள் சாக்கடையாய்,
இந்த மதுரை கருப்புவாசகம்..
இவன் மீடியாவில் மதுரை வாசகம்,
பயணம் என்ற குறும்படத்தின் மூலம்,
கவிஞராக உருவெடுத்தவன், பின்பு
கோவை 360-ன் நாடகத்தின் மூலம்
இரண்டவது பாடலை சின்னத்திரையில்,
பதித்தவன், மேலும் வளர்ந்து வரும்
ஏழைக்கவிஞன் என்றால் மிகையில்லை.!
மேலும், உலக நாயகனுக்கு ஓர் முத்தம்,
மல்லிகை நாயகி, செவ்வாய் கிரகத்தில்
ஓர் செம்மொழி கவிஞர்,(கருணா நீதிக்கு)
மதுரை மயாணக்கரையில் உயிர்த்தெழுந்த,
வைகைபுயலின் சரித்திரம்,(வடிவேலுக்கு)..
வீரச்சேரனும் வெள்ளலூர்காரனும்
(இயக்குனர் எங்கள் சேரனுக்கு)
கல்லரை கண்ணிர், ஈழத்து மகன்,
சிந்தனை சிறகுகள் இரவலாக,
மீடியா திரைபடப்பாடல் என்ற,
கை நிறை கனவுகளோடு...!
இவன் மதுரை வாசகம்..!
வரும் வெற்றி.......!
கவிதை எழுதி கையுக்குள் வைத்திருக்கிறேன்..
பாட்டை எழுதி பையுக்குள் வைத்திருக்கிறேன்..
பாடும் காலம் ..
என் கவிதையால் ஆடும் ..
என்ற நம்பிக்கையில்..
உங்கள் மதுரை வாசகம்...
Facebook Id - Madurai vasagam..
Maduraikaruppuvasagam@yahoo.in.
email Id - vasagam_jasmine@yahoo.in
கிழக்கும் மேற்கும் ஆன நீயும்...
வடக்கும் தெற்கும் ஆன நானும்...
இணைந்தது எவ்வாறு?
~பிரபாவதி வீரமுத்து
மூச்சு திணற.. திணற..சாகடிக்கிறாய் என்னை! மூர்கத்தினால் அல்ல
உன் முத்தத்தினால்!!!
நம் காதல் ஜனிக்க மீண்டும் மீண்டும் மரணிக்க ஆசைபடுகிறது என் மனது!
மழையில் நனைந்த மகிழ்ச்சியில்
வடிக்கிறது குடை
ஆனந்தக் கண்ணீர் ....!!
ஒரு சுருக்கில் இருவரும்..
ஒரு குழியில் இருவரும்..
ஒரு அம்பில் இருவரும்..
ஒரு தீயில் இருவரும்..
ஒரு நஞ்சில் இருவரும்..
ஒரு அலையில் இருவரும்..
ஒரு நெஞ்சடைப்பில் இருவரும்..
ஒரு நெரிசலில் இருவரும்..
ஒரு விபத்தில் இருவரும்..
ஒரு வலியில் இருவரும்..
ஒரு கொலையில்
நான் மட்டுமே.
உனக்கு முன்
நின்று கத்தியை
தாங்கி –உன்
மடியில் வீழ்ந்து கிடக்கின்றேன்..
ஒரு சுருக்கில் இருவரும்..
ஒரு குழியில் இருவரும்..
ஒரு அம்பில் இருவரும்..
ஒரு தீயில் இருவரும்..
ஒரு நஞ்சில் இருவரும்..
ஒரு அலையில் இருவரும்..
ஒரு நெஞ்சடைப்பில் இருவரும்..
ஒரு நெரிசலில் இருவரும்..
ஒரு விபத்தில் இருவரும்..
ஒரு வலியில் இருவரும்..
ஒரு கொலையில்
நான் மட்டுமே.
உனக்கு முன்
நின்று கத்தியை
தாங்கி –உன்
மடியில் வீழ்ந்து கிடக்கின்றேன்..
” நான் எதன் விதை??
என் வேர்களை எங்கு விரிப்பேன்??
ஆழமாகவா? அகலமாகவா???
இளநீர் தர உயரலாமா??
இல்லை நிழல் தர பரவலாமா??
விதையிலை நிலையில் எவ்வளவு நாட்கள்??
வேர் விட வேர் விட எங்கு நான் பாய்வேன்??
வேரின் பயணப் பாதையே கேள்வியோ??
பேரென்று எனக்கேதும் ஏன் இன்னும் இடவில்லை??
நான்…
தென்னையா ஆலமரமா??
அடச்சீ..
பேருக்காய் காத்திருக்கிறேனே !!
வேர் விட பூமியே இல்லாதபோது!!
என் காலடியில் கிடப்பது வெறும்
பாசி மண் அல்லவா?? “
பேசி ஓய்ந்தது வீட்டுக்கூரை ஓட்டின்மேல்
வளர்ந்த சின்னச்செடி!!
ம்ம்ஹ்ம்….
அடுத்த பிறவியிலாவது அந்த விதை மண்மீது விழட்டும்!!
விரும்பும் வரையில் வேர்விட்டு
என்னடா இந்த காதல்.......!
அன்று...!
கைபிடித்து கலங்காதே! என்று
கனவில் வந்தவள்..
காலங்கள் என்னொடும்,
மண்ணொடு என்றவள்..!
மல்லிகை இதழ் கொடுத்து
மனதில் கவி எடுக்க வைத்தவள்..!
இன்று....!
யோசிக்க நேரமில்லாத காலம்,
எங்குதேட?
என் காதலையும் தேடலையும்,
திரும்பி படுக்க இடம்மில்லாத..!
தெருவோர வாழ்க்கை..! என்னை,
சீரழித்து பல நாளாகி பல்லிழிக்கிறது..!
பார்த்துகொண்டிருக்கும் கடவுளே,
என்னை பார்த்து பரதனாட்டியம்
ஆடி மகிழ்ச்சி கொண்டாட..!
நான்..! இனி பகல் இரவாய்..!
கனவுகண்டு என்ன பயன்..?
புரண்டழுத என்
கரிசல்மண் பாதையும்,
ஊர் உறங்கும் நேரமும்,
ஊலையிடும் நரியும்....
குரட்டை விடும்