ஒட்டுகூரை சின்னச்செடி
” நான் எதன் விதை??
என் வேர்களை எங்கு விரிப்பேன்??
ஆழமாகவா? அகலமாகவா???
இளநீர் தர உயரலாமா??
இல்லை நிழல் தர பரவலாமா??
விதையிலை நிலையில் எவ்வளவு நாட்கள்??
வேர் விட வேர் விட எங்கு நான் பாய்வேன்??
வேரின் பயணப் பாதையே கேள்வியோ??
பேரென்று எனக்கேதும் ஏன் இன்னும் இடவில்லை??
நான்…
தென்னையா ஆலமரமா??
அடச்சீ..
பேருக்காய் காத்திருக்கிறேனே !!
வேர் விட பூமியே இல்லாதபோது!!
என் காலடியில் கிடப்பது வெறும்
பாசி மண் அல்லவா?? “
பேசி ஓய்ந்தது வீட்டுக்கூரை ஓட்டின்மேல்
வளர்ந்த சின்னச்செடி!!
ம்ம்ஹ்ம்….
அடுத்த பிறவியிலாவது அந்த விதை மண்மீது விழட்டும்!!
விரும்பும் வரையில் வேர்விட்டு நிமிரட்டும்!!