காணாமல் போகிறேன்

நெருப்பில் விழுந்த ஒரு துளியாய்
காணாமல் போகிறேன்
நம் கண்கள் நோ்கோட்டில் சந்திக்கும் பொழுது

காற்றை எதிா்கும் ஒரு காகிதமாய்
காணாமல் போகிறேன்
காற்றிலே உன் கூந்தல் பறக்கும் பொழுது

அலைகளை எதிா்கும் ஒரு சிப்பியாய்
காணாமல் போகிறேன்
உன் விரலோடு என் விரல் சேரும் பொழுது

நேற்று பிறந்த குழந்தை போல்
மொழி தொியாமல் முளிக்கிறேன்
நீ என்னிடம் பேசும் பொழுது

கானல் நீரை தேடும் பறவைகளை போல்
என்னை தேடுகிறேன்
உன்னுடன் நான் இருக்கும்பொழுதெல்லாம் ்

எழுதியவர் : revathikumar (12-Aug-15, 10:57 pm)
Tanglish : kanaamal pokiren
பார்வை : 96

மேலே