குடும்பத்தின் ஆரோக்கியம்

கூட்டாக வாழ்வதில்
குடும்பங்கள் மகிழ்ச்சி
ஆகா இக்காலத்திலும்
இப்படி ஒற்றுமை
கண்படப் போகிறது
என்றெல்லாம் சிந்திக்கும்
காலம் மெல்ல மெல்ல
மலையேறிப் போகிறது
கூட்டாக வாழ்ந்தவர்கள்
தனித் தனியான குடும்பங்களாய்
தனிக்குடித்தனம் சென்று விடுகிறார்கள்
ஏன் எதற்கு என்ற கேள்விக்கு
எரிச்சல் பொறாமை சுயநலம்
இவர்களையும் விட்டு வைப்பதில்லை
அசைத்துதான் பார்க்கிறது
அசைவுக்கு இடம் கொடுத்தால்
தனிக் குடித்தனம் தள்ளாடச் செல்கிறது தனியாக

கூட்டாக இருக்கும் போது
குறையில்லா வாழ்வில் நிறைவான எண்ணம்
தனிக்குடித்தனம் சென்று விட்டால்
தாம் மட்டும் தமக்கு மட்டும் என்ற குறுகிய எண்ணம்
குட்டிக்கரணம் போட வைக்கிறது வாழ்வில்
யாரை மனம் நோவது
யாரை சொல்லி என்ன பயன்
கூட்டாக இருக்கும் போது
அத்தனை குடும்பங்களும் செல்லக் குடும்பங்கள்
செல்வக் குடும்பங்களாகும்,

தனியாக பிரிந்து வாழும் போது
திட்டமிட்ட வாழ்க்கை
இல்லைஎன்றால் நடுத் தெருதான் தஞ்சம்
கூட்டாக வாழும் போது கண்ட சுகம் சொர்க்கமே
தனிக் குடியாக வாழ விரும்பினால் சுதந்திரம் தான்
ஆனால் எதற்கும் அவசரம் அந்தரம் தனிமை வாட்டுகிறது
குழந்தைகள் என்று வந்து விட்டால் சிரமம் தான்
செலவுகளும் எல்லை மீறிப் போய் விடும்
அப்போது தான் நாம் உணர முடியும்
கூட்டுக் குடும்பத்தின் நன்மைகளும் சுகங்களும்

நிழலின் அருமை வெயிலில் சென்றால் தான் தெரியும்
கூட்டாக வாழும்போது காணும் சுகம்
அந்த சொர்க்கம் தனிமையில் இல்லையே
எதிலும் வெறும் வீராப்பும்,
விதண்டாவாதமும் தான் மிஞ்சும்
கூட்டாக வாழ்வதே குடும்பத்தின் ஆரோக்கியம்
இதை உணர்ந்து வாழும் குடும்பங்கள்
காண்பதெல்லாம் அன்பும் நட்பும் ஆரோக்கியமுமே

எழுதியவர் : பாத்திமா மலர் (12-Aug-15, 10:38 pm)
பார்வை : 157

மேலே